;
Athirady Tamil News

புதிதாக 7,171 பேருக்கு தொற்று: கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக குறைந்தது !!

0

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26-ந்தேதி பாதிப்பு 9,629 இருந்தது. நேற்று முன்தினம் 9,355 ஆகவும், நேற்று 7,533 ஆகவும் குறைந்த நிலையில் இன்றும் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 39 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 9,669 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 56 ஆயிரத்து 693 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று 25 பேர், கேரளாவில் விடுபட்ட 15 மரணங்கள் என மேலும் 40 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 508 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.