;
Athirady Tamil News

பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியது சீனா!!

0

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கே மக்கள் அங்கு தவிப்பதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. Powered By VDO.AI பாகிஸ்தானில் குறைந்தளவே அந்நிய செலாவணி கையிருப்பாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனும் கிடைப்பது நிச்சயமில்லாததாகி விட்டது. இந்நிலையில், அந்நாட்டிற்கு அதன் நட்பு நாடான சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக கிடைத்துள்ளது.

நேற்றிரவு சீனாவிடமிருந்து இந்தத் தொகையை பெற்றதை பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி (State Bank of Pakistan) உறுதிப்படுத்தியது. இருந்தாலும் வேறு எந்த விவரங்களையும் அந்த வங்கி பகிர்ந்து கொள்ளவில்லை. அந்நிய செலாவணி கையிருப்பு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்திருக்கும் நிலையில், இந்த ஒரு பில்லியன் டாலர் சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கும். முன்னதாக, பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார், சீனாவுக்கு திருப்பி செலுத்த வேண்டிய நிலுவை தொகையான 1.3 பில்லியன் அமெரிக்க டாலரில் கடந்த திங்கட்கிழமையன்று 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியது, அந்தத் தொகை திரும்பக் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் கூறியிருந்தார்.

2019-ம் வருடம் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிணை எடுப்பு தொகையில், மீதமுள்ள 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு அந்த நிதியம் பல நிபந்தனைகளை கூறி பாகிஸ்தானை அதன் வரம்புகளுக்குத் தள்ளுவதாகவும், நிதியத்தின் நிபந்தனைகளில் பலவற்றை பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே நிறைவேற்றி விட்டதாகவும் கூறி வருகிறது. இந்த தொகை கிடைக்காததால் அந்நாட்டின் பொருளாதாரம் திவாலடையும் விளிம்பில் உள்ளது. இந்த திட்டம் ஜூன் 30 அன்று முடிவடைவதால், முழுத்தொகையும் செலுத்தப்பட வாய்ப்பில்லை. வாஷிங்டனை தளமாகக் கொண்டது சர்வதேச நாணய நிதியம்.

பாகிஸ்தானின் கொள்கைகளுக்கு இந்த நிதியம் ஒப்புதல் அளித்துவிட்டது என காட்டும் விதமாக ஒரு அடையாளச் செய்கையாக 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் கோருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாமல் அந்நாடு பலதரப்பு கடன்களையோ அல்லது இருதரப்பு உதவிகளையோ பெற முடிவதில்லை. ஒரு சில விஷயங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவை சவூதி அரேபியா மற்றூம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகள் வழங்கும் நிலையில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு உதவ உறுதியாக உள்ளது. டார் முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக சாடினார். அந்நிறுவனத்தின் கடன் தொகுப்புக்குப் பின்னால் புவிசார் அரசியல் இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

உலக நிறுவனங்கள், இலங்கையைப் போல பாகிஸ்தானும் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திவாலாவதை விரும்புவதாகவும், அதற்கு பிறகே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அவை விரும்புவதாகவும் அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாத நிலையில், தனது பொருளாதாரத்தை இயங்க வைப்பதற்கான வாய்ப்புகளை பாகிஸ்தான் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. டார் அறிவித்திருக்கும் பொருளாதார கொள்கையின்படி, அந்நாடு தனிப்பட்ட நாடுகளுடன் இருதரப்பு கடன்களை திருப்பி செலுத்துவது பற்றி விவாதிக்கவும், அதே சமயம், பலதரப்பு கடன்களை சரியான நேரத்தில் செலுத்தவும் இருப்பதாக தெரிகிறது.

ஜூலை 1-ம் தேதி தொடங்கி அடுத்த நிதியாண்டில், சீனா 4 பில்லியன் இருதரப்புக்கான 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு புதுப்பிக்கும் என்று நம்பப்படுகிறது. அதே நேரம் பாகிஸ்தான் பல்வேறு நாடுகளுடன் சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை புதுப்பிக்கும் என்றும் தெரிகிறது. சீன மேம்பாட்டு வங்கியிடமிருந்து பெறப்பட்ட, ஜூன் 30-ம் தேதி முதிர்ச்சியடையும் 300 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை மறுநிதியளிப்புக்காக பாகிஸ்தான் கோர திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.