;
Athirady Tamil News

எர்டோகன்- ஜெலன்ஸ்கி சந்திப்பு: உக்ரைன் நேட்டோவில் இணைய சம்மதம் தெரிவித்தது துருக்கி!!

0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. என்றாலும், இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. ராணுவ உதவி கேட்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்றுள்ளார். துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு அதிபர் எர்டோகன் வரவேற்றார். அப்போது உக்ரைன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் தெரிவித்தார். முன்னதாக, சுவீடன் நேட்டோ படையில் இணைய விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் துருக்கி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடன் நிரந்தர உறுப்பினர் ஆக முடியவில்லை. துருக்கி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் குர்திஷ் மற்றும் இதர குரூப் விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்காததால் சுவீடனுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

ஆனால் பின்லாந்து நேட்டோவில் இணைய ஆதரவு அளித்துள்ளது. துருக்கி- ஐரோப்பிய நாடுகள் இடையே உணவு தானியம் குறித்த ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்த ஒப்பந்தம் கருங்கடல் வழியாக உணவு தானியங்களை கொண்டு செல்வது என்பதாகும். இந்த ஒப்பந்தம் வரும் ஜூலை 17-ந்தேதி முடிவடைகிறது. இதை நீட்டிக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என எர்டோகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் தானியங்கள் கருங்கடல் வழியாக எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்.

சுமார் 30 மில்லியன் டன் உணவு தானியங்கள் வெளிநாடுகளுக்கு உக்ரைனில் இருந்து செல்வதால் உணவு தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிக்க முடியும். ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளதால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா தயக்கம் காட்டுகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளிடமும் துருக்கி நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக இருக்க உதவியாக இருக்கிறது. சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகித்து வந்தன. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.