;
Athirady Tamil News

அதிவேக இணைய வசதிக்காக 48 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு – ஸ்பேஸ் எக்ஸ் !!

0

இணையவசதியை முற்றிலும் பெற்றுக்கொள்ள முடியாத இடங்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் தற்போது கலிபோர்னியாவின் வான்டர்பெர்க் ஏவுதளத்தில் இருந்து 48 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பால்கன்-9 வகை ரொக்கெட் மூலம் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் குறிப்பிடுகையில், அதிவேக இணையத்தை ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் வழங்கும் என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.