;
Athirady Tamil News

கொழும்பில் பெருந்தொகை கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

0

கொழும்பில் வாடகை வீட்டில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபரிடம் 32 கடவுச்சீட்டுகள், 3 தேசிய அடையாள அட்டைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 9 உத்தியோகபூர்வ முத்திரைகள், 5 கிராம சேவை சான்றிதழ்கள், 9 பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ராகம – சிறிவர்தன வீதியில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்தொகை பணம்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இந்த வீடு 6 மாதங்களுக்கு முன்னர் 8,500 ரூபாய் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.

இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக கூறிய, 3 இலட்சம் ரூபாய் முதல் பெருந்தொகை பணம்சந்தேக நபரினால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுகேகொட – மஹரகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.