;
Athirady Tamil News

மக்களுக்கு பேரிடியாக மாறவுள்ள மின் கட்டணம்! மூன்றாவது முறையாக கட்டண உயர்வு குறித்து அவதானம்

0

மூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,”சட்டமூலங்களுக்கு அமைவாக வருடத்தில் இரண்டு முறை மட்டுமே மின் கட்டணத்தை அதிகரிக்க முடியும். மின் உற்பத்திக்கான செலவீனங்கள் குறைந்திருக்கின்றது.

ஒரு வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை விடுப்பதானது சட்டவிரோத செயல்.

இந்த நடைமுறைக்கு அப்பால் மின் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது சட்டவிரோதமானது.

மின்சார கேள்வி அதிகரிப்பு
மின் கட்டண அதிகரிப்பிற்கான காரணங்களாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருக்கின்றது என்றும் மின் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கின்றது என்றும் மின்சார சபை கூறுகின்றது.

மின்சார கேள்வி அதிகரிப்பு தொடர்பான அறிக்கைகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியிருந்தது. தற்போது வரையில் அது கிடைக்கப்பெறவில்லை.

எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீர் வளம் இருக்கின்றது.

அதே நேரம் அணல் மின் உற்பத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலைகளும் உலக சந்தையில் குறைவடைந்துள்ளன.”என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.