யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவரின் அன்பளிப்பு
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் சீன அரசின் உலர் உணவுப் பொதிகளை யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் நடைபெற்றது.
சீன அரசினால் 5000 ஆயிரம் பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் திட்டத்தின் ஆரம்பகட்டமாக யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களுக்கு 500 பொதிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இதேபோன்று மாவட்டத்தின் பல இடங்களிலும் அடுத்த கட்டங்களாக உலர் உணவுப்பொதிகளை தூதுவரே நேரடியாக வழங்கி வைக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சீன நாட்டு தூதரக அதிகாரிகள், யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.