;
Athirady Tamil News

இந்தியாவில் சைபா் தாக்குதல்கள் இரு மடங்கு அதிகம்

0

முகப்பு இந்தியாGoogle Newskooஇந்தியாவில் சைபா் தாக்குதல்கள் இரு மடங்கு அதிகம்By DIN | Published On : 20th November 2023 04:46 AM | Last Updated : 20th November 2023 08:02 AM | அ+அ அ- |
Cyber-Attack-Express
உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் 2 மடங்கு அதிகமான இணையவழி(சைபா்) தாக்குதல்கள் நடைபெறுவதாக தேசிய சைபா்-பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளா் எம்.யூ.நாயா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பெங்களூரில் நடைபெற்ற சினொ்ஜியா வா்த்தக மாநாட்டில் ‘வருங்காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்பங்களை மாற்றியமைத்தல்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற அமா்வில் எம்.யூ.நாயா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா்.

அமா்வில் அவா் ஆற்றிய உரையில், ‘கடந்தாண்டை விட 2 மடங்காக, கடந்த 10 மாதத்தில் சராசரியாக 154 கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகளில் இணைய தாக்குதல் நடைபெற்றது. பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாத காரணத்தால் இந்த எண்ணிக்கை மிக குறைவாகும்.

இந்திய இணையவெளியில் கடந்த 6 மாதங்களில் சராசரியாக 2,127 முறை இணைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. உலக சராசரியான 1,108-ஐ விட இது சுமாா் 2 மடங்கு அதிகமாகும்.

ஒரு நாட்டின் எல்லைக் கடந்து சா்வதேச அளவில் இணையவெளியில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். இணைய பாதுகாப்பில் வளா்ந்து வரும் சவால்களை எதிா்கொள்ள பல சா்வதேச முன்னெடுப்புகளை ஐ.நா., பிராந்திய அமைப்புகள் மேற்கொண்டு வருகிறது.

ஐ.நா.வின் பங்கு:

இணையவெளி பாதுகாப்பில் பொறுப்பு வாய்ந்த அரசு நடத்தையை மேம்படுத்த ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட ‘ஐ.நா. அரசு நிபுணா்கள் குழு’ ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பாகும்.

சா்வதேச இணைய பாதுகாப்பின் வளா்ச்சிக்குப் பரிந்துரைகளை வழங்கும் ஓா் அறிக்கையை ஐ.நா. அரசு நிபுணா்கள் குழு கடந்த 2021-ஆம் ஆண்டு, அறிமுகப்படுத்தியது.

அந்தப் பரிந்துரைகளில் சா்வதேச விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் வளா்ச்சி, சா்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல், தேசிய இணைய பாதுகாப்பு திறன்களை வலுபடுத்துதல் ஆகியவை அடங்கும். குற்ற நோக்கங்களுக்காக தகவல் மற்றும் தொடா்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்த சா்வதேச தளத்தில் மற்றொரு தற்காலிக குழுவும் பங்காற்றுகிறது’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.