;
Athirady Tamil News

பிரான்சில் 303 பேருடன் பிடிபட்ட விமானம்! புகலிட விண்ணப்பம் கோரிய பயணிகள்..வெளியான பரபரப்பு தகவல்கள்

0

பிரான்ஸ் நாட்டில் ஆள் கடத்தல் நடந்ததாக சந்தேகத்தின் பேரில் சிறைபிடிக்கட்ட விமானம் தொடர்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆள் கடத்தல் குற்றச்சாட்டு
துபாயில் இருந்து நிகரகுவா நோக்கி 303 பேருடன் விமானம் ஒன்று பயணித்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரான்சின் மார்னே பகுதியில் தரையிறக்கப்பட்டது.

அந்த விமானத்தில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது. மேலும், அதில் ஆள் கடத்தல் நடந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம், இதுதொடர்பாக இந்தியத் தூதரகம் உரிய அனுமதி பெற்றதாக இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

புகலிடக் கோரிக்கை
அத்துடன் இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், பயணிகளில் 10 பேர் பிரெஞ்சு புகலிடக் கோரிக்கை முன் வைத்து விண்ணப்பித்ததாக தெரிய வந்துள்ளது.

விசாரணை காரணமாக சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு தற்காலிக படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடிய விடிய விசாரணை
ஆள் கடத்தல் குற்றச்சாட்டினால் விடிய விடிய விசாரணை நடந்த நிலையில், இரண்டு பேரை பொலிஸார் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. பிரான்ஸ் சட்டத்தின்படி ஆள் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டிருந்தால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

ஆனால் விமானம் நிறுவனமோ கடத்தல் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளது. மேலும், Legend Airlines Charter விமானத்தின் 15 பணியாளர்கள் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.