;
Athirady Tamil News

லண்டனில் குடியிருப்புக்கு அருகிலேயே நடந்த துயரம்… 16 வயதுடைய பெண் மீது வழக்கு

0

லண்டனில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த இளைஞர் வழக்கில், பிணையில் விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாகும் மூன்றாவது நபர்
குறித்த 16 வயது பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. 16 வயது Taye Faik கொலை வழக்கில் கைதாகும் மூன்றாவது நபர் தொடர்புடைய பெண். Taye Faik கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் திகதி கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் நவம்பர் 3ம் திகதி 16 வயது பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணைக்கு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டு, ஜனவரி 5ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

இவருடன் Taye Faik கொலை வழக்கில் ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர். 20 மற்றும் 18 வயதுடைய இவர்கள் இருவரும் எதிர்வரும் பிப்ரவரி 16ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

மூன்று இளைஞர்கள் பிணையில்
இதனிடையே, இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான மூன்று இளைஞர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று Taye Faik தமது குடியிருப்புக்கு திரும்பும் வழியில் கொடூரமாக தாக்கப்பட்டார்.

ஆனால் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் கடுமையாக போராடியும் அவர் உயிர் தப்பவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது லண்டன் தெருக்களில் பொலிஸ் நடமாட்டம் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.