;
Athirady Tamil News

தேவாலயத்தில் மோதல் – அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

0

அண்மையில் அன்னைக்கு மாலை அணிவிக்க சென்ற அண்ணாமலைக்கு ஊர் மக்கள் தடை சொன்னதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

அண்ணமாலை
கடந்த 7, 8ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், பொம்மிடி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி புகழ்பெற்ற கிறுஸ்தவபுனித லூர்து அன்னை மலைக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய சென்றுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள், அங்கு திடீரென கூடி அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர்களில் சிலர், அப்போது பாஜக என்ன செய்தது என்று வினவினர்.

வழக்குப்பதிவு
அப்போது இளைஞர் ஒருவர் எங்க கோவில் இது..? என்று அண்ணாமலைக்கு மறுப்பு தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு பிறகு, அன்னைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சென்றுள்ளார் அண்ணாமலை.

முன்னதாக அண்ணாமலை தரப்பிற்கும், ஊர் மக்களுக்கும் ஏற்பட்ட வாங்குவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், புனித லூர்து அன்னை தேவாலயத்தில் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்ததாக அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்தப் புகாரின் பேரில் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.