;
Athirady Tamil News

யாழ்.சுன்னாகத்தில் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு கிலோ கேரளக் கஞ்சா நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.