;
Athirady Tamil News

புகைப்பட ஆதாரத்தால் ரூ.7 கோடி இழந்த பெண்மணி!

0

விபத்தில் சிக்கிய பெண்மணி ஒருவர் ரூ.7 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு புகைப்பட ஆதாரத்தால் கிடைக்காமல் போன சம்பவம் ஒன்று ஐய்ர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் வசிப்பவர் கமிலா கிராப்ஸ்கா (Kamila Grabska). அவருக்கு வயது 36. 2017ல், கமிலா, ஒரு கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

இழப்பீட்டு தொகை
அவருக்கு கழுத்து பகுதியிலும், முதுகு தண்டிலும் ஏற்பட்ட காயங்களால் 5 வருடங்கள் செயல்பட முடியாமல் இருந்ததாகவும், அவரால் தன் குழந்தைகளுடன் கூட விளையாட முடியவில்லை என கூறி கார் விபத்தின் காரணமாகத்தான் இந்த செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்து காப்பீட்டு நிறுவனத்தில், இழப்பீட்டு தொகையை கோரினார்.

கமிலா கோரிய ரூ.7 கோடியை ($8,20,000) அவர்கள் தர மறுத்ததால், கமிலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேற்கு அயர்லாந்தின் “லைம்ரிக்” (Limerick) பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. தனது சமகால ஊதிய இழப்புடன் எதிர்கால உத்தேச ஊதிய இழப்புடன் சுமார் ரூ.7 கோடி இழப்பீடு கோரியிருந்தார் கமிலா.

அந்த விசாரணையின் போது 2018ல் ஒரு நன்கொடை நிகழ்ச்சியின் போது கமிலா பங்கேற்ற புகைப்படங்கள் அவருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், ஒரு மணி நேரம் தனது நாயுடன் ஒரு பூங்காவில் அவர் சாதாரணமாக நேரம் கழிக்கும் வீடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த புகைப்படங்களில் ஒன்றில் கமிலா 5 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை தூக்கி வீசும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனால், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, “பெரிதாக காணப்படும் கிறிஸ்துமஸ் மரத்தை எளிதாக கமிலா எறிவது புகைப்படத்தில் தெரிகிறது.

தன்னை முடக்கும் அளவிற்கு காயங்கள் ஏற்பட்டதாக கமிலா கூறி காப்பீட்டை கோருவது மிகைப்படுத்தலாக தெரிகிறது. எனவே, அவரது வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என தீர்ப்பளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.