;
Athirady Tamil News

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0

ஜப்பான் நாட்டில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று முன் தினம் (1) மாலை 4.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

புவி தட்டுக்கள் மோதிக்கொள்ளும் பகுதி
ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்புகளும் பதிவாகாத அதே வேளை, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிங்க் ஆப் பயர் எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.

மேலும் ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் கடந்த வாரம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.