;
Athirady Tamil News

தினம் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

0

பொதுவாகவே இந்திய உணவுகளில் அதிகமாக வெங்காயம் என்பது பயன்படுத்தப்படுகிறது. இந்திய உணவுக்கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து எப்போதாவது ஆராய்ந்து பார்த்து இருக்கிறீர்களா?

அதிலும் சமைத்து சாப்பிடும் வெங்காயத்தை காட்டிலும் பச்சையாக சாப்பிடும் வெங்காயத்தில் ஊட்டச்சத்துகள் அதிகமாக காணப்படுகிறது.

வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்
வெங்காயத்தில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வெங்காயத்தில் சுமார் 44 கலோரிகள் உள்ளன.

சுமார் 10 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

ஒரு நடுத்தர அளவிலான வெங்காயம் தோராயமாக 2 கிராம் நார்ச்சத்தை வழங்குகிறது.

வெங்காயத்தில் 9 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது.

சுமார் 190 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

வெங்காயம் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறியாகும். அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை அதிகமாக வழங்குகிறது.

பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பச்சையாக சாப்பிடுவதால் உடலில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

நிறைய நார்ச்சத்து காணப்படுவதால் செரிமானத்திற்கு உதவுகிறது.

உடலில் இருந்து நச்சுகளை நீக்கும்.

மலச்சிக்கல், மூல நோய் பிரச்சனையை போன்றவற்றை குறைக்கும்.

எலும்புகளை பலப்படுத்தும்.

கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கும்.

பச்சை வெங்காயம் தோல் சுருக்கங்கள், வயது புள்ளிகள், நிறமிகளை நீக்குகிறது.
மேலும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் சில தீமைகள் ஏற்படும்.

வெங்காயத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெங்காயம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.