;
Athirady Tamil News

விக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்த கிண்ண போட்டியில் சம்பியனானது KCCC அணி

0

கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகத்தின் 33வது வருட விக்ரம்-ராஜன்-கங்கு ஞாபகார்த்த கிண்ணக் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் KCCC என அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி இந்த வருட சாம்பியன் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

கடந்த வருட சாம்பியனான Grass Hoppers அணிக்கும் KCCC அணிக்கும் இடையில் கடந்த ஞாயிறு(10) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய KCCC 40 ஓவர்களில் 7 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 197 ஓட்டங்களைப் பெற்றது.

ஜெயரூபன் சிறப்பாக விளையாடி 71 ஓட்டங்களைப் பெற்றார் . Grasshoppers அணியின் ரசிகரன் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார் .

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய Grasshoppers அணி 26.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. Grasshoppers அணியின் வரலக்‌ஷன் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்கள் என்ற மட்டத்தில் இருந்த அணியின் நிலையை 30 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் ஓரளவு மீட்டெடுத்தார்.

KCCC அணியின் சாம்பவன் பந்து வீச்சில் 32 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களையும், துஷியந்தன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியின் சிறந்த வீரருக்கான விருதினை KCCCஇன் சாம்பவனும், தொடருக்கான சிறந்த வீரர் விருதினை துஷ்யந்தனும், தொடரின் அதிக ஓட்டங்களை எடுத்தவருக்கான விருதினை ஜெயரூபனும், தொடரின் அதிக விக்கட்டுக்களை எடுத்தவருக்கான விருதினை சாம்பவனும் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் அனைவரும் KCCC அணியின் வீரர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.