;
Athirady Tamil News

ஆமாம், நான் மருந்தை உட்கொண்டென்., வெளிப்படையாக போட்டுடைத்த எலோன் மஸ்க்

0

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் (Elon Musk), மருந்து உட்கொள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மீண்டும் பதிலளித்துள்ளார்.

எலோன் மஸ்க் சமீபத்தில் மருந்தை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார்.

மனஅழுத்தம் போன்ற பாதகமான சூழ்நிலைகளைச் சமாளிக்க மருத்துவரின் அறிவுறுத்தலின்படி கேட்டமைன் (ketamine) என்ற மருந்தை உட்கொண்டதாக அவர் கூறினார்.

டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாகத்தில் (It Helps Him In Running Tesla) மருந்துகளின் பயன்பாடு தனக்கு பயனுள்ளதாக இருந்ததை அவர் வெளிப்படுத்தினார்.

கடந்த காலங்களில் தனக்கு மன உளைச்சல் இருந்ததாகவும், அப்போது அதில் இருந்து வெளியேற கெட்டமைன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.

மருத்துவரின் ஆலோசனைப்படி வாரம் ஒருமுறை சிறிய அளவில் எடுத்துக்கொள்வதை அவர் வெளிப்படுத்தினார்.

நான் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்கிறேன். என் மீது நிறைய அழுத்தம் இருந்தது. நான் அதிக நேரம் மன அழுத்தத்தில் இருந்தால் டெஸ்லாவின் செயல்திறன் கடுமையாக பாதிக்கப்படும். அதை முறியடிக்க தான் கெட்டமைன் மருந்தை உட்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

யாராவது கெட்டமைன் மருந்தை அதிகமாக உட்கொண்டால், அவர்களால் எந்தப் பணியையும் சரியாக முடிக்க முடியாது என்று மஸ்க் கூறினார்.

எனினும், போதைப்பொருள் உட்கொண்டதை மஸ்க் ஒப்புக்கொள்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த காலத்திலும் இந்த தலைப்பில் பேசியிருக்கிறார்.

மஸ்க் அடிக்கடி சட்டவிரோத மருந்துகளை உட்கொண்டதாக குற்றம் சாட்டப்படுவது அறியப்படுகிறது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பார்ட்டிகளில் மஸ்க் போதைப்பொருள் உட்கொள்வதாக ஒரு கட்டுரையை வெளியிட்டது.

இது மஸ்கின் உடல்நலம் மற்றும் அவரது வணிக சாம்ராஜ்ஜியத்தின் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்று ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழ் வெளிப்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.