;
Athirady Tamil News

விருதுநகரில் ராதிகா சரத்குமாருக்கு எதிராக களமிறங்கும் விஜயகாந்தின் மகன்

0

மக்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பிடித்துள்ளது. தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக நேற்று  அறிவித்துள்ளது.

மத்திய சென்னை -ப.பார்த்தசாரதி

திருவள்ளூர் (தனி) – கு.நல்லதம்பி

கடலூர் தொகுதி – சிவக்கொழுந்து

தஞ்சாவூர் தொகுதி – சிவநேசன்

விருதுநகர் தொகுதி – விஜய பிரபாகர்

விருதுநகர் மக்களவை தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவருக்கெதிராக விஜயாகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடவுள்ளார்.

திமுக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.