;
Athirady Tamil News

பல தடவைகள் புனித குர்ஆனை எரித்த நபர்! சொந்த நாட்டில் உயிராபத்து

0

சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சையை ஏற்படுத்திய நபர், ஈராக்கிற்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் நாட்டைச் சேர்ந்தவரான சல்வான் மோமிகா எனும் குறித்த நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.

ஈராக்கிற்கு நாடு கடத்த அனுமதி
வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்த காரணத்தினால் கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டதாக சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அவரை ஈராக்கிற்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

நோர்வேயில் புகலிடம்
இதேவேளை அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகின்றது.

இந்தநிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.