;
Athirady Tamil News

சீனாவுடன் மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்து

0

சீனாவின் தரச் சான்றளிப்பு மையம் மற்றும் இலங்கை தரநிலைப் பணியகம் ஆகியவை சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற விழாவில் இணக்க மதிப்பீட்டு முடிவுகளை பரஸ்பரமாக அங்கீகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி,நேற்றுமுன் தினம்  (29) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது இதன்போது சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன சீன-இலங்கை ஒத்துழைப்பில் இது ஒரு மைல்கல் என்றும் பாராட்டியுள்ளார்.

இந்த உடன்படிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான தரச் சான்றிதழ் அமைப்புகளின் பரஸ்பர அங்கீகாரத்தை ஊக்குவிக்கவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்கவும் உதவும் என்று குணவர்தன கூறினார்.

தரம் மற்றும் போட்டித்தன்மை
“இது இரு நாடுகளிலும் தயாரிப்பு தரம் மற்றும் போட்டித்தன்மையை உயர்த்தும், பொருளாதார செழிப்பை வளர்க்கும் அதே வேளையில் நமது மக்களுக்கான நட்பு மற்றும் நலனை ஆழப்படுத்தும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

சீன-இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பிற்கான தர முகாமைத்துவம் மற்றும் வர்த்தக வசதிகளில் இணக்க மதிப்பீடு ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமரின் சாட்சியாக, இலங்கையில் அன்ஹுய் வர்த்தக சபை திறப்பு விழாவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.