;
Athirady Tamil News

கனடா செல்லக் காத்திருப்போருக்கு பேரிடி! நிறுத்தப்பட்ட வேலை விசா நடைமுறை

0

கனடாவுக்கு (Canada) மாணவர் விசாவினூடாக பயணம் செய்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் வேலை விசாவை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளுக்கமைய ஒருவரின் கணவன் அல்லது மனைவிக்கு வேலை விசாவை (Spousal Visa) பெற்றுக் கொள்ளும் செயல்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது.

வேலை விசா ஊடாக கனடாவுக்கு செல்வோருக்கான செயல்முறை சரிவர பின்பற்றப்படுவதை உறுதிபடுத்துவதற்காக கனடா குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

வேலை விசா
இதன்படி, கனடாவில் மாணவர் விசா (Student Visa) ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஒருவரின் கணவன் அல்லது மனைவிக்கு வேலை விசா வழங்கும் நடைமுறையை கடந்த மாதம் 19 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் கனடா மாற்றியமைத்துள்ளது.

இதற்கமைய, கனடாவில் உள்ள 10 வகையான பிரிவில் உயர்கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் மற்றும் செல்லுபடியாகும் மாணவர் விசாக்களை கொண்டுள்ள தரப்பினரின் வாழ்க்கைத்துணைக்கு மாத்திரம் வேலை விசா வழங்கப்படவுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழகத்திடமிருந்து மாணவருக்கு வழங்கப்படும் கடிதம், பதிவு செய்ததற்கான சான்றுகள் மற்றும் கணவன்-மனைவி என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்களை பரீசிலனை செய்ததன் பின்னர், வேலை விசா வழங்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள்

மாணவர் விசா ஊடாக கனடாவுக்கு செல்வோர் சட்டவிரோதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் தற்போது வேலை விசா தொடர்பான சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கனடா அரசாங்கத்தால் அங்கீகரிக்கபடாத பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தரப்பினர் மற்றும் வேலை விசாவுக்கான தகமைகளை பூர்த்தி செய்யாதவர்களுக்கு கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் விசா வழங்கபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கணவன் அல்லது மனைவிக்கான வேலை விசா தொடர்பான மேலதிக விபரங்களை கனடாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை இணையதளத்தின் ஊடாக அறிந்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.