;
Athirady Tamil News

இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

0

பிரித்தானிய பத்திரிகைகள் அதிகம் எழுதுவது இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் குறித்துத்தான்.

ஆனால், ராஜ குடும்பத்தில், அதுவும், இளவரசர் வில்லியமுக்கும், ஹரிக்கும் சகோதர உறவுமுறையினரான, அதிகம் வெளியில் தலைகாட்டாத இருவர் இருக்கிறார்கள்.

கமீலாவின் பிள்ளைகள்

ஒரு காலத்தில் தனது தவறான முடிவுகளால் ராஜ குடும்பத்தையே குழப்பிய கமீலா, சார்லசைக் காதலித்துவிட்டு, ஆண்ட்ரூ பார்க்கர் பௌல்ஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

கடமைக்காக டயானாவைத் திருமணம் செய்துகொண்டாலும் சார்லசின் மனம் கமீலாவிடமே இருந்தது. மீண்டும் சார்லஸ் கமீலாவின் உறவு ரகசியமாகத் தொடர, அது வெளியே தெரியவந்து ராஜ குடும்பத்தில் பெரும் குழப்பம் வெடிக்க, சார்லஸ் விவாகரத்தில் துவங்கி, டயானாவின் மரணத்தில் அது முடிந்தது.

அப்படி ஆண்ட்ரூவுடனான திருமணம் மூலம் கமீலாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் Laura Lopes (45) மற்றும் Tom Parker Bowles (48). கமீலா, சார்லசைத் திருமணம் செய்துகொண்டதால், அவர்கள், இளவரசர்கள் வில்லியமுக்கும் ஹரிக்கும் சகோதர சகோதரி உறவுமுறையாகிவிட்டார்கள்.

அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி

அவர்களில், இளவரசர் ஹரிக்கு சகோதரி முறை கொண்டவரான Laura Lopes, அதிகம் பொது இடங்களில் தலைகாட்டுவதில்லை. அவரைக் குறித்த செய்திகளும் அதிகம் வெளியாவதில்லை.

லாரா, ஆங்கில கலைத்துறை தொடர்பிலான பணியிலிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளை பொதுவாக தவிர்க்கும் லாரா, இளம் வயதில் சந்தித்த அனுபவங்கள் காரணமாக இன்னமும் தன் மீது ஊடகப்பார்வை விழுவதைத் தவிர்க்கவே விரும்புகிறார்.

கமீலா, இளவரசர் சார்லசை திருமணம் செய்த பிறகு, தனது தாயின் கணவரும், அவரது பிள்ளைகளும் தனது இதயத்தைக் கவர்ந்துவிட்டதாக லாரா பெருமையாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.