புனித ஸ்தலத்திற்கு பயணித்தவர்களில் 13 யாத்ரீகர்கள் பலி

பாகிஸ்தானில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 யாத்ரீகர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹப் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் லொறி ஒன்றில் பயணித்துள்ளனர்.
அவர்கள் புனித ஸ்தலம் ஒன்றை நோக்கி அவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற லொறி ஆழமான சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 13 பேர் பலியானதாகவும், 30 பெற காயடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.