;
Athirady Tamil News

விரைவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பம் : ஜோதிடர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான திகதிகள் குறித்து இந்திய ஜோதிடர் குஷால் குமார் (Kushal Kumar) தகவல் வெளியிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப் போர்கள் குறித்து நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus), பாபா வங்கா (Baba Vanga ) உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல ஜோதிடர்கள் கணித்துள்ள நிலையில், தற்போது குஷால் குமார் மூன்றாம் உலகப்போர் குறித்த தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2024 இல் உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளே இதை கணிக்க கூடியதாக உள்ளது.

கடுமையான உடல் நிலை
கொரியா நாடுகள், சீனா (China) தைவான் (Taiwan) மற்றும் மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும் அத்தோடு இஸ்ரேல் (Israel) மற்றும் காசா (Gaza) போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றன.

அத்தோடு, மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் (Ukraine) ரஷ்யா (Russia) போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படுவதுடன் சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள்.

சாத்திய கூறுகள்
சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது பதவி விலக நேரிடலாம் அதே நேரத்தில் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம்.

அதை தடுக்க இராணுவம் கொண்டு வரப்படலாம் அத்தோடு இதனால் இன்னும் சில வாரங்களில் மூன்றாவது உலக போர் நடைபெற வாய்ப்பு உள்ளது.

ஜூன் 18 ஆம் திகதிக்கு பிறகு மூன்றாவது உலக போரை தூண்டுதலுக்கான சாத்திய கூறுகள் உள்ளதுடன் அதற்கு முன்னதாக ஜூன் 10 ஆம் திகதியோ அல்லது 29 ஆம் திகதியோ கூட நிகழ வாய்ப்பு உள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.