;
Athirady Tamil News

உலகின் முதல் பணக்காரர் இவர் தான்! மிரள வைக்கும் சொத்து மதிப்பு

0

உலகின் முதல் பணக்காரராக இருந்த மன்னர் ஒருவர் குறித்து இங்கே காண்போம்.

400 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்பிரிக்காவின் ஒரு நாட்டினை ஆண்டவர் தான் மான்சா மூஸா.

14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசரான மூஸாவின் சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் 32 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

ஐவரி கோஸ்ட், செனகல், மாலி மற்றும் புர்கினோ பாசோ வரை இவரது நாட்டின் எல்லை நீண்டிருந்தது. இவரது முக்கிய வருமானமாக தங்கம் மற்றும் உப்பு ஏற்றுமதி தான்.

உலகின் பாரிய தங்க உற்பத்தியாளர்
அவர் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார். மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டபோது, அவர் பயணம் செய்த வாகனம் தான் இதுவரை சகாரா பாலைவனத்தில் பாரிய வாகனமாகவும் கருதப்படுகிறது.

மூஸா தனது பயணத்தின்போது 100க்கும் மேற்பட்ட ஒட்டகங்களையும், பாரிய அளவில் தங்கத்தையும் கொண்டு சென்றுள்ளார். மிகப்பெரிய வள்ளலாக இருந்ததன் மூலம் இவரது புகழ் பரவியிருக்கிறது.

மேலும் அரசருக்கு எல்லாம் அரசர் என்று மூஸாவை அழைப்பார்கள். பிரித்தானிய அருங்காட்சியகத்தின் தகவல்படி மூஸாவினுடைய ஆட்சிக் காலத்தில் உலகின் பாரிய தங்க உற்பத்தியாளராக மூஸா இருந்துள்ளார்.

தன்னை நாடி வருபவர்களுக்கு தங்க கட்டிகளை தானமாக கொடுத்த மூஸா தான் உலகின் முதல் பணக்காரர் என்று கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.