;
Athirady Tamil News

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினம்

0

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினம் வெள்ளிக்கிழமை(13) அன்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீன் வழிகாட்டலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன், கல்முனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி அதிகாரி திருமதி ஜெனிதா மோகன், மற்றும் கல்முனை வடக்கு சுகாதார சேவைகள் பணிமனையின் பொது சுகாதார தாதிய சகோதரி திருமதி சி.எம் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.