தவித்த மாற்றுத்திறனாளி குழந்தை – உடனடியாக வீடு கட்டி கொடுத்த த.வெ.கழகத்தினர்!!
தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறார்கள்.
பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாரபூர்வமாக கட்சியினை துவங்கினார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அக்கட்சியின் பெயர் துவங்கி சில நாட்களிலேயே இந்தியா முழுவதும் எதிரொலித்தது.
தான் தற்போது நடித்து வரும் படங்களை முடித்து கையோடு தீவிர அரசியலில் இறங்குவேன் என நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
அந்த வரிசையில் தான், கோவை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் மாற்றுத்திறனாளி குழந்தை ஒருவருக்கு நலத்திட்ட உதவியாக விலையில்லா வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்கள்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்தினருக்கு வீடு கட்டி கொடுத்து மட்டுமின்றி மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களையும் வழங்கியிருக்கிறார்கள்.
கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு கட்சியின் நிர்வாகிகளுடன் இனிது இந்த வீட்டினை கட்டி கொடுத்துள்ளார்கள். மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு கட்டி கொடுத்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள்.