;
Athirady Tamil News

அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க ட்ரம்ப் முடிவு

0

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 நிர்வாக உத்தரவுகள்
ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் கொள்கைகளை விரைவாக மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக உத்தரவுகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி பொறுப்புக்கு வந்ததும் முதல் நாளிலேயே 100 நிர்வாக உத்தரவுகளுக்கு அவர் கையெழுத்திடுவார் என்றே நம்பப்படுகிறது. தனது திட்டங்களின் ஒரு பகுதியாக, அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கவும் ட்ரம்ப் உத்தரவிடுவார்.

தேர்தல் பரப்புரையின் போதே, ஜோ பைடனின் வெளிப்படையான எல்லை கொள்கைகளை ரத்து செய்ய இருப்பதாக ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.

டொனால்டு ட்ரம்ப் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றதும் எடுக்க திட்டமிட்டிருக்கும் டசின் கணக்கான நிர்வாக உத்தரவுகளை ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியுள்ளதாகவே கூறப்படுகிறது.

புதிய வரி விதிப்பு
மேலும், பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது அமெரிக்காவில் வசிக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் இனி தாமாகவே அமெரிக்க குடிமக்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

எல்லையில் தேசிய அவசரகால அறிவிப்பின் ஒரு பகுதியாக, எல்லையை மூட பாதுகாப்புத் துறையை ட்ர,ப் அறிவுறுத்துவார். அத்துடன் எல்லையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.

முன்னதாக, பதவியேற்ற முதல் நாளிலேயே கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்குள் ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால் பதவியேற்பு நாளில் புதிய வரி விதிப்பு எதுவும் அறிவிக்கப்படாது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.