வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம் எச்சரிக்கை

அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் கொள்கலன்களை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்துவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குறித்த வாகனங்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்கத்திணைக்கள பேச்சாளர் சீவலி அருக்கொட எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி தொடக்கம் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.