;
Athirady Tamil News

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் புலம்பெயர்தலுக்கெதிராக ஒரு பயங்கர முடிவு: வரலாற்றில் முதல்முறை

0

வரலாற்றில் முதல்முறையாக, புலம்பெயர்வோரை இருகரம் நீட்டி வரவேற்கும் ஜேர்மனியில், புலம்பெயர்தலுக்கெதிராக ஒரு பயங்கரமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலுக்கெதிராக ஒரு முடிவு
ஜேர்மன் வரலாற்றிலேயே முதன்முறையாக, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சி ஒன்று ஆதரவளித்த பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆம், ஜேர்மனியை சமீப காலமாக கத்திக்குத்துத் தாக்குதல்கள் உலுக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த தாக்குதல்களின் பின்னணியில் புலம்பெயர்ந்தோர் இருக்கும் விடயம் அரசியலாகியுள்ளது.

இப்படி புலம்பெயர்ந்தோர் நம் பிள்ளைகளைக் கொன்றுகொண்டே இருப்பதை நாம் பார்த்துக்கொண்டே இருக்கலாமா என கேள்வி எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

இந்நிலையில், ஜேர்மனியின் பிரதான எதிர்க்கட்சியான CDU/CSU கட்சிகளின் கூட்டணி, புலம்பெயர்தல் மற்றும் புகலிட விதிகளை கடுமையாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்தது.

புலம்பெயர்தல் எதிர்ப்பு, வலதுசாரிக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சி அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க, ஜேர்மன் வரலாற்றில் முதன்முறையாக வலதுசாரிக் கட்சி ஒன்றின் உதவியுடன் பிரேரணை ஒன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

AfD கட்சியின் தலைவரான ஆலிஸ் வீடல் (Alice Weidel), இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள், ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என புகழ, இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததால் அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சியினர் உட்பட மற்ற கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்ப, நாடாளுமன்றம் கூச்சலும் குழப்பமுமாக சந்தைக்கடை போல மாறியது.

விடயம் என்னவென்றால், பிப்ரவரியில் ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த பிரேரணை சட்டமாக அமுலாகுமா என்பது சந்தேகமே.

மேலும், அப்படியே அது சட்டமாக அமுல்படுத்தப்படுமானால், அது ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கு எதிரானது என்பதால், மேலும் குழப்பங்களே உருவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.