யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ் மாவட்ட செயலர் அணிவகுப்பு மரியாதைகளை தொடர்ந்து 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு , தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து , மதகுருமார்களின் ஆசியுரை இடம்பெற்று , மாவட்ட செயலரின் உரை இடம்பெற்றது.