தமிழர் தாயக பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்

திருகோணமலை, அக்போபுர பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக நேற்று கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து அக்போபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதற்கமைய, உயிரிழந்தவர் 60 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை
சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்தப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.