தெஹியோவிட்ட பகுதியில் சற்றுமுன் தீ விபத்து – ஒருவர் பலி!

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகஸ்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (7) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் தெஹியோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளது.
ஒருவர் பலி
தகரக்கூரை பொருத்தப்பட்ட சிறிய அறையொன்றில் தீ பரவிய நிலையில், அந்த அறையில் தனியாக வசித்துவந்த 65 – 70 வயதுக்குட்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை நீதவானால் தொடர் விசாரணை நடத்தப்படவுள்ளது. மேலும் இந்த தீ விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.