‘முன்கூட்டியே பூமி திரும்பும் சுனிதா’

போயிங் நிறுவனத்தின் ஸ்டாா்லைனா் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு சா்வதேச நிலையம் சென்று அந்த விண்கலம் பழுதானதால் அங்கேயே சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீரா் சுனிதா வில்லியம்ஸும், அவருடன் சென்ற மற்றொரு நாசா வீரா் பட்ச் வில்மோரும் புதிய திட்டத்தின்கீழ் மாா்ச் மாதமே பூமி திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் அவா்கள் வரும் ஏப்ரல் மாதம்தான் பூமிக்கு அழைத்துவரப்படுவாா்கள் என்று முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது.