சீன நிறுவனங்கள் கடும் போட்டி., சொந்த நாட்டில் தாக்குபிடிக்கமுடியாமல் Porsche எடுத்த முடிவு

ஜேர்மனியில் கிட்டத்தட்ட 2000 வேலைகளை குறைக்க Porsche திட்டமிட்டுள்ளது.
சீன தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியாமல் சொந்த நாடான ஜேர்மனியில் Porsche விற்பனையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போர்ஷே நிறுவனம் தனது EV (மின்சார வாகனம்) விற்பனை சரிவுக்கு மத்தியில், 2029-க்குள் ஜேர்மனியில் 1,900 வேலைகளை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த முடிவு, கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளால் எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர்ஷேவின் விற்பனை சரிவு & நஷ்டம்
போர்ஷேவின் உலகளாவிய விற்பனை கடந்த ஆண்டு 3 சதவீதம் குறைந்தது, இதில் முக்கியமாக சீன சந்தையில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2025-ல் புதிய மாடல்கள் மற்றும் பேட்டரி தொடர்பான திட்டங்களுக்காக கூடுதல் 800 மில்லியன் யூரோ செலவாகும் என போர்ஷே கணித்துள்ளது.
வேலைகளை விருப்பத்தின் பேரில் விடுபடுத்த (voluntary retirement) மற்றும் வேலையளிப்பு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய மாற்றம்
BYD, XPeng, NIO போன்ற சீன நிறுவனங்கள் தங்களது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கத்திய நிறுவனங்களை கடுமையாக போட்டியிடத் தொடங்கியுள்ளன.
BYD தனது “Gods Eye” நவீன AI டிரைவிங் அமைப்பை இலவசமாக அறிமுகம் செய்துள்ளது.
அதே நேரத்தில், போர்ஷே மற்றும் ஃபோக்ஸ்வேகன் (VolksWagen) போன்ற நிறுவனங்கள் பழைய பெட்ரோல் வாகனங்களை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன.
EV சந்தையின் வளர்ச்சி தொடரும் நிலையில், போர்ஷே தனது நிலையை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளும் என்பது கவனிக்க வேண்டிய விடயமாக உள்ளது.