;
Athirady Tamil News

ஜேர்மனியில் புலம்பெயர் நபர் நடத்திய தாக்குதல்… தாயாரும் மகளும் பரிதாப மரணம்

0

ஜேர்மனியின் மியூனிக் நகரில் ஆப்கானிஸ்தான் புலம்பெயர் நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு தாயாரும் அவரது பிஞ்சு மகளும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்த 39 பேர்களில்
37 வயதான அந்த தாயாரும் அவரது 2 வயதேயான மகளும் ஆப்கான் புலம்பெயர் நபரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் காயமடைந்த 39 பேர்களில் இருவர் என்றே கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, வியாழக்கிழமை வெள்ளை நிற மினி கூப்பர் கார் ஒன்று சுமார் 1500 பேர்கள் கலந்துகொண்ட தொழிற்சங்க பேரணி ஒன்றின் மீது புகுந்து தாக்கியது. குறித்த வாகனத்தை ஆப்கானிஸ்தான் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

அந்த சம்பவத்தில் 39 பேர்கள் காயங்களுடன் தப்பினர். அந்த சம்பவமானது மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்துள்ளது. தொடர்புடைய மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஆப்கான் நாட்டவர், 24 வயது ஃபர்ஹாத் என்றும், திருட்டு மற்றும் போதை மருந்து வழக்குகளில் சிக்கி பொலிசாரின் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் இருவர்
தாக்குதலுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துகளை அவர் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2016 டிசம்பர் மாதம் ஃபர்ஹாத் ஜேர்மனிக்கு புகலிடம் கோருவவராக வந்துள்ளார், ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களால் அவரது புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், தாக்குதல் சம்பவத்தில் இருவர் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் பொலிசாரால் சுடப்பட்டு சம்பவயிடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார் என்றும், ஃப்ர்ஹாத் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.