;
Athirady Tamil News

ஆன்லைனில் இலங்கை குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

0

இலங்கை குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று, பல முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனை குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் நேற்று (18) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு நிறுவனமான NCMEC
குழந்தைகளுக்காகப் பணியாற்றும் அமெரிக்க அரசு நிறுவனமான NCMEC, தொடர்புடைய முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நாட்டில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் தாக்கல் செய்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்தின் பெண் தலைமை ஆய்வாளர் சமந்தா நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்தார்.

இதனையடுத்து குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்திற்கு உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.