;
Athirady Tamil News

விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி; காட்டிக்கொடுத்த மோப்ப நாய்

0

இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டிக்கொடுத்த மோப்ப நாய்
சந்தேக நபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலையத்தில் இருந்த பொலிஸ் மோப்ப நாய் ஒன்று சந்தேக நபர் கொண்டு பயணப் பொதிகளை மோப்பமிட்டு சத்தமிட்டுள்ளது.

இதனையடுத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்கள் இணைந்து, சந்தேக நபர் கொண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பொம்மைகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 300 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.