இன்றும் நாளையும் சில ரயில் சேவைகள் இரத்து

களனி தொடருந்து பாதையில் இன்று(22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பங்கிரிவட்டப் பகுதியில் நடைபெற்று வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும் நாளையும் பகல் வேளைகளில் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதுடன் இரவில் தொடருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.