;
Athirady Tamil News

7விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ செயலி ; இந்திய சிறுவனின் சாதனை

0

7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ. செயலியை கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள தலாஸ் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன் சித்தார்த் நந்த்யாலா. இவர் ஆந்திராவின் ஐதராபாத் பூர்வீகமாகக் கொண்டவர்.

இளம் மென்பொறியாளர்
உலகளவில் ஏ.ஐ சான்றிதழ் பெற்ற இளம் மென்பொறியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ துறைக்கு உதவும் விதமான புதிய படைப்பை உருவாக்கி உலகளவில் கவனத்தை பெற்றுள்ளார்.

7 விநாடிகளில் இதய துடிப்பின் சத்தத்தை வைத்து இதய நோயை கண்டுபிடிக்கும் சர்காடியன் ஏ.ஐ எனும் செயலியை உருவாக்கியுள்ளார். உலகளவில் நிகழும் இறப்புகளில் 31 சதவீதம் உயிரிழப்புகள் இருதய நோய் தொடர்பானது என்பதே, தன்னை இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்க தூண்டியதாக சித்தார்த் நந்த்யாலா தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா என இருநாடுகளிலும் சேர்த்து 2,000 நோயாளிகளிடம் இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.

அண்மையில் சித்தார்த் நந்த்யாலாவை சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.