உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் கொக்குவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர்நாயகம் நீதியரசர்
க.வி.விக்னேஸ்வரன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன், நல்லூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ப.மயூரன், காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பாலச்சந்திரன் உள்ளிட்ட
கட்சியின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.