;
Athirady Tamil News

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

0

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற கரிம உரத்தை கப்பலில் இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேக நபரை ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபரின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.