;
Athirady Tamil News

ஈரானுக்கு உதவத் தயார்! அமெரிக்க தாக்குதலுக்கு கடும் கண்டனம்! – ரஷியா

0

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புடின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது இந்த போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஷி, ரஷியாவில் அதிபர் புடினை நேற்று சந்தித்துப் பேசினார்.

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நியாயமற்றது என்று கூறிய புடின், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானிய மக்களுக்கு உதவ ரஷியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக ஈரானுக்கு ரஷியா உதவ வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அமைச்சர் அரக்ஷி, இஸ்ரேலுக்கு எதிராக தங்களைக் காக்கவே பதில் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும் ஈரானுக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஈரானின் தேவையைப் பொருத்து ரஷியா உதவும் என்றும் இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.