சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – குற்றவாளி மனோஜித் சைக்கோ என குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளி மனோஜித் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கொல்கத்தா சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவி (24) ஒருவர் கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த மனோஜித் மிஸ்ரா(31) அந்த மாணவியை காதலித்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்காததால் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மனோஜித் மிஸ்ரா, அவரது நண்பரான முதலாமாண்டு மாணவர் ஜாயிப் அகமது (19), 20 வயது நிரம்பிய பிரமித் முகர்ஜி மற்றும் கல்லூரியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டவர் என அவரது முன்னாள் வகுப்பு தோழர்களும்,
ஜூனியர்கள் குற்றச்சாட்டு
ஜூனியர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாலியல் வன்முறையில் ஈடுபடும் அளவுக்கு மோசமான நடத்தை உடையவர். அதனால்தான், கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியின் திரிணமூல் பிரிவில் இருந்து மிஸ்ரா வெளியேற்றப்பட்டார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி உட்பட எந்த பெண்களைப் பார்த்தாலும் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று பலமுறை தொல்லை கொடுத்துள்ளார். பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து நண்பர்களிடையே பரப்பும் அளவுக்கு மனநோய் உடையவர்.
பெண்களை உடல்ரீதியாகவும் அவமானப்படுத்துவார். பாலியல் வன்கொடுமை, தாக்குதல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் உடல் ரீதியில் துன்புறுத்தல் செய்வதாக மிஸ்ரா மீது ஏராளமான புகார்கள் மாணவிகளின் சார்பில் தரப்பட்டும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.