;
Athirady Tamil News

திருமணமான 78 நாட்களில் இளம்பெண் விபரீத முடிவு.., அப்பாவுக்கு அனுப்பிய ஆடியோவால் மாமனார் மாமியார் கைது

0

திருமணமான 78 நாட்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் கணவர், மாமனார் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம்பெண் விபரீத முடிவு
தமிழக மாவட்டமான திருப்பூர், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (27) என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த கவின்குமார் என்றவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை ரிதன்யா தின்ற நிலையில் காருக்குள் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரிதன்யா தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அதில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துகின்றனர்.

இதனால் தன்னால் வாழ முடியாது. அதேபோல, மற்றொரு வாழ்க்கையையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியிருந்தார். மேலும், இது தொடர்பான விசாரணையில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.