;
Athirady Tamil News

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை”

0

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.கொட்பிறி யோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையினை யாழ்.பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து அறிக்கை தொடர்பான அறிமுகவுரையை குறித்த நிறுவனத்தின் வடக்கு பிராந்திய முகாமையாளர் அன்றூ நிகழ்த்தினார்.

தொடர்ந்து குழு கலந்தாய்வு இடம்பெற்றது.

இக்கலந்தாய்வில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சட்டத்தரணிகளான ரனித்தா மயூரன், ஐங்கரன் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.