கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!
கனடா நாட்டில் சிறிய ரக விமான விபத்தில், இந்திய இளைஞர் ஒருவர் பலியானது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
நியூ ஃபவுண்ட் லேண்ட் மாகாணத்தின், டீர் லேக் பகுதியில் கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று, பிரிட்டனைச் சேர்ந்த கிஸிக் ஏரியல் சர்வே நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 2 பேரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விபத்தில் பலியானவர்களின் பெயரை வெளியிட அந்நிறுவனம் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் பலியானவர்களின் விவரங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
With deep sorrow, we mourn the tragic passing of Mr. Gautam Santhosh, an Indian national, who lost his life in an accident involving a commercial survey aircraft near Deer Lake, Newfoundland.
We extend our heartfelt condolences to his family during this difficult time. The…
— IndiainToronto (@IndiainToronto) July 28, 2025
இந்நிலையில், இந்த விபத்தில் பலியான 2 பேரில் ஒருவர், கௌதம் சந்தோஷ் எனும் இந்தியர் என்பது உறுதியாகியுள்ளதாக, டொரண்டோவிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று (ஜூலை 29) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில், பலியான 27 வயதான கௌதம் சந்தோஷ், கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும், கிஸிக் ஏரியல் சர்வேவின் டெல்டா நிறுவனத்தில் அவர் டெக்னிகல் எக்ஸ்பெர்டாக, பணியாற்றி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், ஜூலை 8 ஆம் தேதியன்று, கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஏற்பட்ட சிறிய ரக விபத்தில், ஸ்ரீஹரி சுகேஷ் எனும் இந்தியர் உள்பட 2 மாணவ விமானிகள் பலியாகினர். இதில், பலியான ஸ்ரீஹரி சுகேஷும் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.