;
Athirady Tamil News

அழையா விருந்தாளி! ஜூலை 30ல் பூமியை நெருங்கும் விண்கல்! நாசா எச்சரிக்கை!!

0

மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல் ஒன்று, ஜூலை 30ஆம் தேதி பூமியை மிக நெருக்கத்தில் கடந்து செல்லவிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் 2025 ஓஎல்1 என பெயரிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு சிறிய ரக விமானத்தின் அளவில் இருப்பதாகவும், 1.29 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இது பூமியை பாதுகாப்பாகக் கடந்து சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு பூமிக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்திருப்பதாகவும், ஆனால் பூமிக்கு ஆபத்தில்லை என்றும் நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

இதுபோன்ற விண்கல்கள், தொடர்ந்து விண்வெளியில், கண்காணிப்புப் பணிகளை அதிகப்படுத்தி, பூமிக்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் என்றால் அதனை தடுக்கும் உபாயங்களைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே நாசா, இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு மையங்களுக்கு எச்சரிக்கை தகவலாக அமைந்துள்ளது.

இந்த விண்கல், வேகமாக பயணிப்பதால், மிக விரைவாக பூமியைக் கடந்து சென்றுவிடும் என்றும், இது பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்லும்போது, விஞ்ஞானிகள் இதைக் கொண்டு அடுத்தக்கட் ஆய்வுகளை நடத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.

விண்கற்கள் எங்கிருந்து வருகின்றன?

வான் வெளியில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே லட்சக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவற்றில், பூமியைத் தாக்க வாய்ப்புள்ள விண்கற்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் இனங்கள் முற்றிலும் அழியக் காரணமே மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் விழுந்த விண்கல் வெடிப்புதான் என்று வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

சென்ற நூற்றாண்டில் 1908 ஜூன் 30, காலை 7 மணியளவில் ரஷிய நாட்டின் சைபீரியா பகுதியில், துங்குஸ்கா எனும் இடத்தில் 100 மீ. குறுக்களவு கொண்ட ஒரு விண்கல் தரையில் இருந்து, ஐந்து மீட்டர் உயரத்தில் வெடித்தது. அதனால் 2,150 சதுர கி.மீ. பரப்பில் இருந்த எட்டு கோடி மரங்கள் கருகின.

அப்படியொரு விண்கல் மீண்டும் பூமியின் மீது மோதுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவே நாம் பூமியின் தோற்றம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்றும், விண்கற்களை கண்காணிப்பதிலும் விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச விண்கற்கள் தினம் ஜூன் 30ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.