பிரித்தானியாவின் முதல் AI MP: மக்களுடன் உரையாட அரசியல்வாதியின் புதிய முயற்சி
பிரித்தானியாவில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) நாடாளுமன்ற உறுப்பினர் உருவாக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் Leeds South West மற்றும் Morley தொகுதியின் லேபர் கட்சி எம்.பி. மார்க் சீவார்ட்ஸ் (Mark Sewards) தன்னைப் போலவே ஒரு AI பதிப்பை உருவாக்கியுள்ளார்.
இது ஒரு AI Chatbot ஆகும். இது Neural Voice என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே பிரித்தானியாவின் முதல் Virtual MP என அழைக்கப்படுகிறது.
இந்த AI Chatbot மார்க் சீவார்ட்ஸின் குரலில் பதிலளிக்கும். இதன்மூலம், பொதுமக்கள் எந்நேரத்திலும் (24/7) உதவியை பெறலாம்.
இது ஒரு prototype மட்டுமே, எதிர்காலத்தில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி பொதுமக்களுக்கும் எம்.பி. அலுவலகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
மக்கள் இந்த புதிய AI தொழில்நுட்பத்தை ஏற்கவேண்டும் எனவும், “நீங்கள் இதில் ஈடுபடாமல் விட்டுவிட்டால் நாம் பின்னோக்கி செல்ல நேரிடும்” என்றும் எம்.பி. மார்க் சீவார்ட்ஸ் கூறியுள்ளார்.
ஆனால், இது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையில் மேலும் இடைவெளியை ஏற்படுத்தும் என சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், மனித உறவுகள் குறையும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க முடியாது என பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.