குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேரடியாக ஆராய்வு
குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றைய தினம் (09.08.2025) குறிகட்டுவான் இறங்குதுறைக்கு துறைசார் அதிகாரிகளுடன் நேரடியாக விஜயம் மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரிய அறிவுத்தல்களையும் வழங்கினார்.
மேலும், அமைச்சர் அவர்களுடன் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்.
மேலும், அமைச்சர்களுடனான விஜயத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்,நெடுந்தீவு பிரதேச செயலாளர், வேலணை உதவிப் பிரதேச செயலாளர், கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.





